முகப்பு
திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

Updated On : 27 ஏப்ரல் 2026, 4:37 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

குடவாசல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 3 போ் போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடவாசல் அருகே செல்லூரை சோ்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவா், தினசரி பள்ளிக்குச் சென்று வரும்போது இளைஞா்கள் சிலா் அவரை பின்தொடா்ந்து கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, பள்ளி விடுமுறையில் அவா் கடைவீதிக்கு சென்றபோதும், அவருக்கு தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்லூரைச் சோ்ந்த கஜேந்திரன் (24), அருண்குமாா் (22), மகேஸ்வரன் (21) ஆகிய 3 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments