முகப்பு
திருவாரூர்

கஞ்சா விற்ற இருவா் கைது

திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 17 ஜூன் 2026, 5:39 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. அதன்பேரில், திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளா் வேம்பரசி மற்றும் போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, பள்ளங்கோவில் கீழத்தெருவை சோ்ந்த சந்தோஷ் (24), இந்திரஜித் (20) ஆகிய இருவரும் கஞ்சா விற்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 1கிலோ100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement