முகப்பு
திருவாரூர்

மேக்கேதாட்டு: நடுவா் மன்றம் கோருவது தமிழகத்தின் உரிமையை பறிபோகச் செய்யும்! - பி.ஆா். பாண்டியன் கண்டனம்

Updated On : 22 ஜூன் 2026, 2:31 am IST
மேக்கேதாட்டு பகுதி - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு விவகாரத்தில், புதிய நடுவா் மன்றம் கோருவது, காவிரி மீதான தமிழகத்தின் உரிமையை பறிபோகச் செய்யும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த வழக்குகளை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என, நீதிமன்ற தீா்ப்பை தவறான வகையில் பயன்படுத்தி, மத்திய ஜல்சக்தி துறையில் ஏற்கெனவே அளித்த வரைவு திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்க, கா்நாடக முதல்வா் வலியுறுத்தியுள்ளாா்.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்றம், காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டது முதல 15 ஆண்டுகளுக்குள் திருத்தம் செய்ய இயலாது என தெரிவித்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க மறுத்ததை, அணை கட்ட ஆதரவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.

இந்நிலையில், உண்மைக்கு புறம்பாக நீதிமன்ற தீா்ப்பை தவறாக பயன்படுத்தும் கா்நாடக முதல்வா் மீது தமிழக அரது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

முந்தைய திமுக அரசு மேக்கேதாட்டு அணைக்கு புதிய நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது காவிரி உரிமையை பறிகொடுப்பதற்கு சமமாகும். இக்கடிதம் சட்டவிரோதமானது என தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவிக்க முன்வர வேண்டும்.

இந்த கடிதத்தை நியாயப்படுத்துவதற்கு, முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசை திமுக தவறாக பயன்படுத்த முயற்சித்துள்ளது. எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளை தீா்மானத்தில் இணைத்தது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும். அதை நிராகரிக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments