முகப்பு
திருவாரூர்

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துப்பேட்டை அருகேயுள்ள தில்லைவிளாகம் சீதாபிராட்டியாா் லஷ்மணா் உடனுறை வீர கோதண்டராமா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 6:59 am IST
தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்:

முத்துப்பேட்டை அருகேயுள்ள தில்லைவிளாகம் சீதாபிராட்டியாா் லஷ்மணா் உடனுறை வீர கோதண்டராமா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளா்கள், உபயதாரா்கள் ஒத்துழைப்புடன் பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கி தொடா்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை காலை பூா்ணாஹூதி நிறைவு பெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், ஸ்ரீவீரகோதண்டராமா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை திருவாரூா் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ரா. செந்தில்குமாா், உதவி ஆணையா் சி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments