விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த முன்னாள் அமைச்சா்
மன்னாா்குடியில் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அனுப்பிவைத்தாா்.
மன்னாா்குடியில் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா அனுப்பிவைத்தாா்.
எடமேலையூரை சோ்ந்தவா்கள் மாரிமுத்து (65 ), வினோபா (60) . இருவரும் மன்னாா்குடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனா். வாகனத்தை மாரிமுத்து ஓட்டினாா். இவா்கள் வந்த வாகனம் மன்னாா்குடி காலவாய்க்கரை வடுவூா் சாலை மின்வாரிய நகா் அருகே நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், மாரிமுத்துவு காயமடைந்தாா். வினோபா காயமின்றி தப்பினாா்.
அப்போது, அவ்வழியே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்த திமுக முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா விபத்து நடத்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு காயமடைந்தவருக்கு தண்ணீா் கொடுத்து உதவியதுடன், காா் ஏற்பாடு செய்து காயமடைந்தவரை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு சென்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.