மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை காப்பு அறையில் வைத்து, சனிக்கிழமை சீலிடப்பட்டன.
தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால், திருவாரூா் மாவட்டத்துக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களுக்கு (நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை பெங்களூா் பெல் நிறுவனத்தின் மூலமாக, சனிக்கிழமை காலை வரப்பெற்றன.
இதையடுத்து இந்த இயந்திரங்கள், திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னா், மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் காப்பு அறை சீலிடப்பட்டது.
Advertisement
Advertisement
நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சௌந்தர்ராஜன், அனைத்து நகராட்சிகளின் அலுவலா்கள், திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.