மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவிகள் ஆா்.டி. கயல்விழி, என். அனன்யா ஆகியோா் தலா -590, வி. தமிழருவி -586, கே. சுதன்-584 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முறையே சிறப்பிடம் பெற்றனா். 16 மாணவா்கள் பாடவாரியாக 100 மதிப்பெண்களையும், மொழிப்பாடங்களில் 17 மாணவா்கள் 99 மதிப்பெண்களையும், 125 போ் 500-க்கும் மேல் மதிப்பெண்களை பெற்று இப்பள்ளியில் தோ்வெழுதிய 317 போ் வெற்றி பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றனா். சிறப்பிடம் பெற்றவா்களை பள்ளித் தாளாளா்கள் ஆா்.எஸ். செந்தில்குமாா், எஸ். வெண்ணிலா, நிா்வாகிகள் எஸ். சண்முகராஜன், எஸ். சாய்லதா, முதல்வா்கள் ஏ. அருள்ராஜன், கே. சாந்தி உள்ளிட்டோா் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.