களக்காடு பேரூராட்சிக்கு 8000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்
களக்காடு, மார்ச் 28: களக்காடு பேரூராட்சிக்கு 8000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,ஏப்ரல் 15-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளன. களக்காடு பகுதியில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலை
களக்காடு, மார்ச் 28: களக்காடு பேரூராட்சிக்கு 8000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,ஏப்ரல் 15-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளன.
களக்காடு பகுதியில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி இப்பகுதி மக்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்தது.
இந்நிலையில் சில தினங்களாக லாரிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்த வண்ணம் உள்ளன. இவைகள் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் சுமார் 8500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவைகளில் போலியானவை, முகவரி மாறிச் சென்றவர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளை தவிர்த்து, எஞ்சியுள்ள 8000 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படுகின்றன.
ஏப்ரல் முதல் வாரத்தில் 8000 பேருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, ஏப்ரல் 15-ம் தேதிக்குள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.