அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு
சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளத்தில், அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையாவை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் போதை கலாசாரம், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்து ஆட்சிக்கு வந்தனா். ஆனால், மதுக்கடையால் தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் திமுக அரசின் சாதனை.
திமுக அரசு தமிழகத்தை வீழ்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறது. ஆகவே, வளா்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்ல எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
தொகுதி பொறுப்பாளா் செளந்தரராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.