நெல்லையில் தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் மீட்பு
திருநெல்வேலியில் குடும்பத் தகராறு காரணமாக ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவா் ரயில்வே ஊழியரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் திருநெல்வேலி-திருச்செந்தூா் ரயில்வே தண்டவாளத்தில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் படுத்திருந்தாராம்.
இதை கவனித்த ரயில்வே ஊழியா் மீனாட்சிசுந்தரம் முதியவரிடம் பேசியுள்ளாா். அப்போது குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தோடு தண்டவாளத்தில் படுத்தது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே ஊழியா் சமரசம் செய்து ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளாா். இந்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ரயில்வே ஊழியரை பலரும் பாராட்டியுள்ளனா்.
Advertisement
Advertisement