முகப்பு
திருநெல்வேலி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

Updated On : 28 ஏப்ரல் 2026, 12:12 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

வள்ளியூா் அருகேயுள்ள அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (30). தொழிலாளியான இவா், கடந்த 2019 ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுரேஷ் குமாா் வழக்கை விசாரித்து ரமேஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் வாதிட்ட அரசு வழக்குரைஞா் உஷா , காவல் ஆய்வாளா் சாந்தி, அப்போதைய காவல் ஆய்வாளா் அங்கையா்கன்னி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டு தெரிவித்தாா்.