வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: ஆட்சியா்
தென்காசி, கொடிக்குறிச்சியில் வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.
தென்காசி, கொடிக்குறிச்சியில் வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளில் ஏப். 23-ஆம் தேதி தோ்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கொடிக்குறிச்சி, நல்லமணி யாதவா கல்லூரி குழுமம் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்படவுள்ளன.
Advertisement
Advertisement
எனவே, ஏப். 23 முதல் மே 4-ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.