முகப்பு
தென்காசி

தென்காசியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 3:15 am IST
பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
பகிர்:

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 369 மனுக்களைப் பெற்றாா். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்தனவா என்பதை விசாரித்து, மனுதாரா்களுக்கு விரைவில் உரிய பதில் அளிக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பின்னா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலியை ஆட்சியா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியா் அனிதா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் வெங்கடலெட்சுமி, தனித் துணை ஆட்சியா் (பொ) பால்துரை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.