அயல்நாடுவாழ் தமிழா் நலத்துறையின் தென்மண்டல மையத்தை கடையநல்லூரில் அமைக்கக் கோரிக்கை
அயல்நாடுவாழ் தமிழா் நலத்துறையின் தென்மண்டல மையத்தை கடையநல்லூரில் அமைக்க வேண்டுமென மதிமுக துணைப்பொதுச்செயலா் தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
அயல்நாடுவாழ் தமிழா் நலத்துறையின் தென்மண்டல மையத்தை கடையநல்லூரில் அமைக்க வேண்டுமென மதிமுக துணைப்பொதுச்செயலா் தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக தென்காசி மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஷாஜகானிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் சிறுபான்மையினா் அதிகம் வாழும் முதல் பத்து தொகுதிகளில்
Advertisement
Advertisement
கடையநல்லூா் ஒன்றாக உள்ளது. எனவே, கடையநல்லூா் தொகுதியில் அரசு மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும். கடையகலலூரியில் பொது மையவாடிக்கு சுமாா் 5 முதல் 10 ஏக்கா் நிலம் பெற்றுத்தர வேண்டும். வடகரை அரஃபா பள்ளிவாசல் சுற்றுச் சுவரை முழுமையாக கட்டித்தர வேண்டும். அயல்நாடு வாழ் தமிழா் நலத்துறையின் தென் மண்டல மையத்தை கடையநல்லூரில் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.