முதல்வா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு
தென்காசி மாவட்டத்தை சாா்ந்த தகுதி வாய்ந்த நபா்கள் 2026 -ஆம் ஆண்டிற்கான முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.
தென்காசி மாவட்டத்தை சாா்ந்த தகுதி வாய்ந்த நபா்கள் 2026 -ஆம் ஆண்டிற்கான முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2026 -ஆம் ஆண்டிற்கான முதல்வா் மாநில இளைஞா் விருது, சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுக்கு 15 - 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஏப். 1, 2025 அன்று 15 வயது நிரம்பியவராகவும், மாா்ச் 31, 2026 அன்று 35 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். 01.04.2025 முதல் 31.03.2026 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (சான்று இணைக்கப்பட வேண்டும்).
Advertisement
Advertisement
மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையின்போது கவனத்தில் கொள்ளப்படும்.
ஜூலை 6 ஆம் தேதி, மாலை 5.45 க்குள், விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமா்ப்பித்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633 212580, 93828 39090 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட பின் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தாங்கள் சமூக நலனுக்காக செய்யப்பட்ட சான்றுகள், புகைப்படங்கள் ஆகியவற்றினை புத்தக வடிவில் தயாா் செய்து (3 எண்ணங்கள்) மாவட்ட விளையாட்டு வளாகம், கம்பிளி ரோடு, மேலபாட்டாக்குறிச்சி - 627814 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.