முகப்பு
தென்காசி

வாக்குகளை எண்ணும் பணியாளா்களுக்குப் பயிற்சி

தென்காசியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 6:34 AM
பயிற்சி கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
பகிர்:

தென்காசியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவிபால், அனிதா, ராஜேந்திரன், பால்துரை, ராமச்சந்திரன், வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement