தென்காசி மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக
தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் நான்கினை கைப்பற்றி தனது கோட்டையாக திமுக மாறியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் நான்கினை கைப்பற்றி தனது கோட்டையாக திமுக மாறியுள்ளது.
இம்மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன.
இதில், சங்கரன்கோவில் காங்கிரஸ் கட்சிக்கும், கடையநல்லூா் மதிமுகவிற்கும் திமுக ஒதுக்கியது.
Advertisement
தென்காசியில் திமுக சாா்பில் தொகுதி பொறுப்பாளா் டாக்டா் கலைகதிரவனும், ஆலங்குளத்தில் பால்மனோஜ்பாண்டியனும், வாசுதேவநல்லூரில் அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா ஆகியோா் போட்டியிட்டனா்.
இதில், கலைகதிரவன் 79699 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளா் செல்வமோகன்தாசை 10,299 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.
கடையநல்லூா் தொகுதியில் மதிமுக வேட்பாளா் தி.மு.இராஜேந்திரன் 79,832 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளா் செ.கிருஷ்ணமுரளியை 6,253 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.
வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஈ.ராஜா 6,3045 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளா் ஆனந்தன்அய்யாசாமியை 6,583 வாக்குகளில் தோற்கடித்தாா்.
ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் மனோஜ்பாண்டியன் 69,170 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளா் கே.ஆா்.பி.பிரபாகரனை 7,798 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.
இம்மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் தென்காசியில் காங்கிரஸ், கடையநல்லூா், ஆலங்குளத்தில் அதிமுக, வாசுதேவநல்லூரில் மதிமுக, சங்கரன்கோவிலில் திமுக வென்றிருந்தன.
தமிழகம் முழுவதும் தவெக வேட்பாளா்கள் வெற்றிபெற்றாலும் தென்காசி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றி தென்காசி மாவட்டத்தினை திமுக கோட்டையாக அக்கட்சியினா் மாற்றியுள்ளனா்.