முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயிலில் ஏப். 27 இல் மஹா கும்பாபிஷேகம்

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாதம் 27 ஆம் தேதி   மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 8:44 am IST
பகிர்:

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாதம் 27 ஆம் தேதி   மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
 திருநெல்வேலி நகரில் மையப் பகுதியில் அமையப் பெற்றுள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 7.4.2004 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆனதையடுத்து கோயிலில் 30.112017 அன்று பாலாலயம் நடைபெற்று கோபுரங்கள், விமானங்கள் சுதை வேலைகள், மரச்சிற்ப வேலைகள், கல்தூண்களை சுத்தம் செய்தல் போன்ற உள்பட  ரூ. 4.92 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையடுத்து இம்மாதம் 27 ஆம் தேதி  அதிகாலை 4.41க்கு மேல் 5.11 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 
 இதையொட்டி, இம்மாதம் 20 ஆம் தேதி   மாலை 5.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், பஞ்சகாவ்யம், தனபூஜை உள்ளிட்டவை நடைபெறுகின்றன. 21 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தொடர்ந்து பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு தீர்த்த ஸங்கிரஹணம் நடைபெறும். 22 ஆம் தேதி   காலை 8 மணிக்கு நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதி, மாலை 6.30 மணிக்கு ரக்ஷாக்ன ஹோமம், பிரவேச பலி, கிராம சாந்தி ஆகியன நடைபெறும்.
23 ஆம் தேதி  காலை 7 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், சம்ஹிதா ஹோமம், மாலை 5 மணிக்கு வாஸ்துசாந்தி, மிருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம் ஆகியன நடைபெறுகிறது.
24 ஆம் தேதி  காலை 8 மணிக்கு மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், யாகசாலை ஸ்தண்டில் அமைத்தல், மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், யாத்ரா தானம், கடம் யாகசாலை ப்ரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி ஆகியன நடைபெறுகிறது.
25 ஆம் தேதி  காலை 7 மணிக்கு 2 ஆம் யாகசாலை பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு 3 ஆம் கால யாகசாலை பூஜை, பிரதான மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியன நடைபெறும்.
26 ஆம் தேதி  8 மணிக்கு 4 ஆம் காலயாகசாலை பூஜை, பூர்ணாஹுதி, மாலை 5 மணிக்கு 5 ஆம் காலயாகசாலை பூஜை, தீபாராதனை ஆகியன நடைபெறும். 27 ஆம் தேதி  அதிகாலை 2 மணிக்கு ஆறாம் காலயாகசாலை பூஜை, நாடி சந்தானம்,  பரிவார மூர்த்திகளுக்கு யாக சாலை பூர்ணாஹுதி, மஹா பூர்ணாஹுதி, அதிகாலை 3.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் நிகழ்ச்சியை அடுத்து அதிகாலை 4.41 க்கு மேல் 5.11 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்கள், அருள்தரும் ஸ்ரீகாந்திமதி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீநெல்லையப்பர், ஸ்ரீவேணுவனநாதர் மற்றும் பிரதான மூர்த்திகளுக்கு, சமஸ்த தேவதா மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மாலை 4 மஹா அபிஷேகம், இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா ஆகியன நடைபெறுகிறது. 28 ஆம் தேதி  முதல் மண்டலாபிஷேக பூஜை தொடங்குகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments