திறனாய்வுத் தேர்வு: சிறப்பு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த 5 மாதங்களாக மாணவர்களுக்கு விடுமுறை நாள்களில்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த 5 மாதங்களாக மாணவர்களுக்கு விடுமுறை நாள்களில் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டது.
தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தமிழ்நாடு கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு போன்ற தேர்வுகளை அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், கடந்த சில மாதங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.
பயிற்சி நிறைவடைந்த நிலையில், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிதம்பரநாதன், ஆசிரியர்கள் சகாயராஜ், மாரியப்பன், கிறிஸ்டோபர், கல்யாணராமகிருஷ்ணன், முத்துக்குமார், ராமலட்சுமி, வீரபிரகாஷ், சண்முகசுந்தரம் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான்கபீர், மதிப்பூதியம் வழங்கிபாராட்டினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.