முகப்பு
திருநெல்வேலி

நெல்லை நகரம் வலம்புரி அம்மன் கோயிலில் முளைக்கட்டுத் திருவிழா

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி அம்மன் கோயிலில் முளைக்கட்டுத் திருவிழாநடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 8:03 am IST
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி அம்மன் கோயிலில் முளைக்கட்டுத் திருவிழாநடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் வெளித்தெப்பம் அருகே கீழத்தெருவில் அருள்மிகு வலம்புரி அம்மன், புது அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தையொட்டி வளைகாப்பு மற்றும் முளைக்கட்டுத் திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்த பின்பு 1008 வளையல்கள், பட்டுப்புடவையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நவதானியங்கள் அம்பாள் வயிற்றில் கட்டப்பட்டு சீமந்தமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. பெண்களுக்கு விரலி மஞ்சள், திருமாங்கல்ய சரடு, குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments