பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் கிளையின் 5 ஆவது மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் வி. ஆண்டபெருமாள் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை எஸ். ராமையா, சங்கக் கொடியை பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ராஜகோபால் ஆகியோர் ஏற்றினர்.
மாநாட்டை அமைப்பின் மாநிலச் செயலர் சி. வினோத்குமார் தொடங்கிவைத்தார்.
மாநாட்டில், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க அகில இந்திய துணைப்பொதுச்செயலர் எஸ். செல்லப்பா, மாநிலச் செயலர் ஏ. பாபுராதாகிருஷ்ணன், துணைப்பொதுச்செயலர் சி. பழனிசாமி, பி.எஸ்.என்.எல். திருநெல்வேலி பொதுமேலாளர் ப. முருகானந்தம், துணைப்பொதுமேலாளர் லட்சுமணபெருமாள், சிஐடியூ மாவட்டச் செயலர் ஆர். மோகன், பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க அமைப்புச் செயலர் வி. சீதாலட்சுமி, மாவட்டச் செயலர் டி. கோபாலன் உள்பட பலர் பேசினர்.
தீர்மானங்கள்: பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனத்தில் நாடு முழுவதும் ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் இருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுகள் பணி செய்தவர்களை பணி நிரந்தரம் செய்வதை கட்டாயமாக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பிரதிமாதம் 7 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி செப். 5 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்வது; கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்தக் கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அமைப்பின் மாவட்டச் செயலர் எஸ். முருகன் தீர்மானங்களை வாசித்தார். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்டச் செயலர் என். சூசைமரியஅந்தோணி வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் எஸ். ராஜீ நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.