முகப்பு
திருநெல்வேலி

தேசிய வில்வித்தை போட்டி: இலஞ்சி பள்ளி மாணவர்களுக்கு விருது

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில், இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Updated On : 23 ஜனவரி 2019, 7:50 am IST
பகிர்:

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில், இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஸ்டார் ஜெ ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் திருவண்ணாமலை சண்முகநாதா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில், 100 மாணவர்கள் கலந்துகொண்டனர். இலஞ்சி பாரத் பள்ளியை சேர்ந்த மாணவர் குகன் ஆனந்த் 90 நிமிடத்தில் 1,915 அம்புகளும், மாணவர் பிரவின்குமார் 1,802 அம்புகளும் எய்தனர். இம்மாணவர்களுக்கு அகாதெமி சார்பில் "கலாம் புக்ஸ் ஆப் வேர்ல்டு ரிக்கார்டு' விருதும் பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் மோகனகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.