நெல்லையில் 102 டிகிரி வெயில்
திருநெல்வேலியில் சனிக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் சனிக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. தொடர்ச்சியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இந்த நிலையில் சனிக்கிழமை மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கேரளத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதால், அடுத்த வாரம் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.