முகப்பு
திருநெல்வேலி

வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டல்: ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி மனு

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்தில் வீட்டைக் காலி செய்யச் சொல்லி மிரட்டுவதாக, துப்புரவுத் தொழிலாளி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Updated On : 26 மே 2019, 5:35 am IST
பகிர்:


திருநெல்வேலியை அடுத்த தாழையூத்தில் வீட்டைக் காலி செய்யச் சொல்லி மிரட்டுவதாக, துப்புரவுத் தொழிலாளி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருநெல்வேலியை அடுத்த மேலத்தாழையூத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி (29), துப்புரவுத் தொழிலாளி. இவர் தன் கணவர் சமுத்திரப்பாண்டி(33), மகள் முத்துசெல்லி (7) ஆகியோருடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாங்கள் மேல தாழையூத்து பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
அந்தக் குடியிருப்புப் பகுதியில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. எங்களுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறை ஆணையரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு கொடுத்தோம். அதற்கும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து தாழையூத்து போலீஸார்,  அப்பகுதியில் இருந்து வீட்டை காலி செய்ய வேண்டும் என எங்களை மிரட்டுகிறார்கள். எனவே, நாங்கள் அப்பகுதியில் தொடர்ந்து பிரச்னையில்லாமல் குடியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments