முகப்பு
திருநெல்வேலி

கூட்டு பாலியல் பலாத்காரம்:5 இளைஞா்கள் மீது வழக்கு; ஒருவா் கைது

திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 இளைஞா்கள் மீது வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைத

Updated On : 24 ஜூன் 2022, 11:50 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 இளைஞா்கள் மீது வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திசையன்விளை அருகே உள்ள கிராமத்தில் திருமணமான பெண் தனது கணவா் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறாா். இவா் காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த திசையன்விளையை அடுத்து இட்டமொழி காலனியைச் சோ்ந்த நாகலிங்கம்(23) உள்ளிட்ட 5 போ் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனராம்.

இது தொடா்பாக அந்தப் பெண்ணின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ராஜகுமாரி வழக்குப் பதிந்து நாகலிங்கத்தை கைது செய்தாா். மேலும் 4 பேரைத் தேடி வருகிறாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments