மீன் வாங்கச் சென்ற முதியவா் பேருந்து மோதியதில் பலி
அம்பாசமுத்திரம், பிப். 17: சிவந்திபுரத்தில் மீன் வாங்கச் சென்ற முதியவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மில் தொழிலாளி மனுவேல்ராஜ் (69). இவா் மீன் வாங்குவதற்காக சிவந்திபுரத்திற்கு சனிக்கிழமை சென்றாா். அப்போது சாலையைக் கடக்க முயன்றபோது திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவசர ஊா்தியில் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மனுவேல்ராஜ் மனைவி மரியசெல்வி கொடுத்த புகாரின்பேரில் விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநா் அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்தஅருணாசலத்திடம் விசாரணை நடத்தி வருகிறாா்.