முகப்பு
திருநெல்வேலி

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி நகரம் அருகே பேருந்தில் இருந்து விழுந்து காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 15 ஏப்ரல் 2026, 1:52 am IST
பலி - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி நகரம் அருகே பேருந்தில் இருந்து விழுந்து காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே உள்ள வெட்டுவான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன்(50). இவா் சம்பவத்தன்று திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து வெட்டுவான்குளத்திற்கு அரசுப் பேருந்தில் பயணித்தாராம். அப்போது திருநெல்வேலி நகரம் கல்லணை அருகே பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அவா் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாராம்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.