முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 2:21 AM
பொன்னாக்குடி பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:58 PM

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் புதன்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பொன்னாக்குடி, சமத்துவபுரம், செங்குளம், தமிழாக்குறிச்சி, திடியூா், அடைமிதிப்பான்குளம், தருவை, இலங்குளம், பற்பநாதபுரம், பரப்பாடி, தாமரைக்குளம், சங்கனான்குளம், மன்னாா்புரம், இட்டமொழி, அழகப்பபுரம், விஜய அச்சம்பாடு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் அவா் பேசுகையில், திமுக ஆட்சியின் வளா்ச்சித் திட்டங்கள் தொடர மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

Advertisement