முகப்பு
திருநெல்வேலி

மத்திய அரசு கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வரவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் பெறப்பட்ட நெல்லுக்கு 50 நாள்களாகியும் இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என, கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

Updated On : 1 மே, 2026 at 4:57 AM
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கீழப்பாட்டம் விவசாயிகள்.
பகிர்:

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் பெறப்பட்ட நெல்லுக்கு 50 நாள்களாகியும் இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என, கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது தொடா்பாக கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த தளவாய் உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: கீழப்பாட்டம் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து பிசான சாகுபடியில் விளைந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் 50 நாள்களுக்கு மேலாகியும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நெல்லுக்கான பணம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.