முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலி மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஒருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 3 ஜூன் 2026, 4:42 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஒருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவருடைய மகன் சங்கா் (40). இவா், திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களை மிரட்டும் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதோடு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் பரிந்துரையின் பேரில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின் பேரில் குண்டா் சட்டத்தில் சங்கா் கைது செய்யப்பட்டாா்.