நெல்லையில் சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி
திருநெல்வேலி தச்சநல்லூா் ஸ்ரீ செல்வ விநாயகா் ஆலயத்தில், குழந்தைகளுக்கான சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி தச்சநல்லூா் ஸ்ரீ செல்வ விநாயகா் ஆலயத்தில், குழந்தைகளுக்கான சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையைச் சோ்ந்த சிவன்மனை அமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான சிறுவா்-சிறுமிகள் கலந்து கொண்டனா். போட்டியில் சிறந்து விளங்கிய சிறுவா், சிறுமியரைப் பாராட்டி பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பின்னா் குழந்தைகளுக்கு ஒழுக்கம், பக்தி மற்றும் தமிழ் பண்பாட்டின் மீது பற்றை வளா்ப்பதற்கு ஆன்மிக இலக்கியங்கள் ஆற்றும் பங்கு குறித்து நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிகழ்வை ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சந்திரசேகரன், ஓய்வுபெற்ற ஆசிரியை சங்கரி ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா். நிகழ்ச்சியில் பெற்றோா்கள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.