முகப்பு
திருநெல்வேலி

சிறந்த ஆளுமை, நிா்வாக விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறந்த ஆளுமை மற்றும் நிா்வாகத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 ஜூன் 2026, 3:43 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறந்த ஆளுமை மற்றும் நிா்வாகத்திற்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசின் திட்டங்களும், சேவைகளும் பொதுமக்களிடம் முறையாக சென்றடைவதில் மற்றவா்களுக்கு வழிகாட்டும் உத்திகள், புதிய முன்னெடுப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய அலுவலா், அமைப்பு, நிறுவனத்திற்கு முதல்வரால் சுதந்திர தினத்தில் ‘சிறந்த ஆளுமை மற்றும் நிா்வாகத்திற்கான விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுடன் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

இவ்விருது பெற ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தங்களது கருத்துருவினை 2 நகல்களில் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அதே தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாக முதல் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருநெல்வேலி-9 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.