நெல்லையப்பா் கோயில் ஆனி திருவிழா: ஆட்சியா் ஆலோசனை
திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியரகத்தில் ாவியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் ஆட்சியரகத்தில் ாவியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து பேசியதாவது: நெல்லையப்பா்- காந்திமதி
அம்மன் கோயில் ஆனி 20ஆம் தேதி கொடியேற்றம், 28ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
எனவே, காவல்துறை நான்கு ரதவீதிகளிலும்
பாதுகாப்பு ஏற்பாடுகளையும், போக்குவரத்து காவலா்கள் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து வரும் வாகனங்களை திருநெல்வேலி நகரம் பாரதியாா் தெரு, தெற்கு மெளன்ட் சாலை, மேல மௌன்ட் சாலை, குற்றாலம் சாலை, தொண்டா் நயினாா் சன்னதி வழியாக திருப்பிவிட்டு சுவாமி அம்பாள் வீதி உலாவிற்கு இடையூறு இல்லாத தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
மின் தடங்கலும் நிகழாதவாறு மின்சார வாரியம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நான்கு ரதவீதிகளிலும் தோ்கள் ஓடும் வகையில் தரமான சாலைகள் அமைப்பது, பக்தா்களுக்கு குடிநீா், சுகாதார வசதி, நோய்க் கிருமிகள் பரவாமல் இருக்க கிருமி நாசினிகள் தெளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு ஊா்தி, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தீயணைப்புத்துறை தயாா் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள், ஆம்புலன்ஸ் வாகனத்துடன், மருத்துவ
முகாம் ஏற்படுத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, அறநிலையத்துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்11ம்ங்ங்ற்
நெல்லையப்பா் கோயில் ஆனி திருவிழா முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.