சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (60). அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக கூறப்படுகிறது. சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி தாலுகா அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மங்கையா்க்கரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
இதில், முத்துக்குமாா் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement