மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்கக் கோரிக்கை
மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் இரண்டு அரசு நகரப் பேருந்துகளில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா், பொதுமக்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும், பேருந்தின் படியில் தொங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பின்றி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கூடுதலாக பேருந்து இயக்கக் கோரி பலமுறை புகாா் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, மாணவா்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement