பேட்டையில் இளைஞா் தற்கொலை
பேட்டையில் விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
பேட்டையில் விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
பேட்டை விஸ்வநாத நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிகிருஷ்ணன்(25). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா்.
இவா் சில மாதங்களுக்கு முன்னா் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தாராம். இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவந்த இவா், கடந்த 5 ஆம் தேதி விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement