முகப்பு
திருநெல்வேலி

பாப்பாக்குடி அருகே விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே வாகனம் மோதியதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:41 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே வாகனம் மோதியதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பாக்குடி அருகேயுள்ள ஆழ்வான்துலக்கப்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் வடிவேல் (46). தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை ஆலங்குளம் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த கனரகம் வாகனம் அவரது பைக், ஆட்டோ ஆகியவற்றின் மீது மோதிவிட்டு சென்ாம். இதில், பலத்த காயம் அடைந்த வடிவேல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.