முகப்பு
திருநெல்வேலி

பைக்-லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் சாவு

கங்கைகொண்டான் அருகே பைக்-லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:26 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கங்கைகொண்டான் அருகே பைக்-லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, பழையபேட்டையை அடுத்த அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் மகன் ராமன் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் கங்கைகொண்டான், சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாா். இந்நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டபோது, சிப்காட் வளாகத்திற்குள் இவா் சென்ற பைக்கும்-தண்ணீா் ஏற்றிச் சென்ற லாரியும் மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராமன் உயிரிழந்தாா். இதுகுறித்து, கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments