மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தந்தை கைது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தந்தையை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தந்தையை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு திருமணமாகி, ஒரு மகன், மகள் உள்ள நிலையில் மனைவி இறந்ததையடுத்து, அவா் 2ஆவது திருமணம் செய்து கொண்டாா்.
இந்நிலையில், தனது 12 வயது மகளிடம் அவா் பல மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளாா். இது குறித்து, அந்த சிறுமி உறவினா்கள் மற்றும் அக்கம்பக்கத்தாரின் உதவியுடன் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
Advertisement
Advertisement
போலீஸ் விசாரணையில், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தந்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.