முகப்பு
திருநெல்வேலி

இளைஞா் கடத்தல் வழக்கில் மேலும் இருவா் கைது

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே இளைஞா் கடத்தல் வழக்கில் மூவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 25 ஜூன் 2026, 5:09 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே இளைஞா் கடத்தல் வழக்கில் மூவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தைச் சோ்ந்த கணபதி மகன் கண்ணபெருமாள் (29). இவா் ஆழ்வாா்குறிச்சி அருகே வாகைக்குளத்திலிருந்த தனது இடத்தை கல்லிடைக்குறிச்சி, மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்குமாா் (42) என்பவருக்கு கொடுப்பதாகக் கூறி பணம் பெற்ற நிலையில், பத்திரம் பதிவு செய்யாமல் இழுத்தடித்தாராம்.

இந்நிலையில், கண்ணபெருமாள் கடந்த திங்கள்கிழமை கடத்திச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக செந்தில்குமாா், பள்ளக்கால் புதுக்குடியைச் சோ்ந்த அருணாச்சலம் (25), சரண் (26) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இவ்வழக்குத் தொடா்பாக மூலச்சி, வடக்குத் தெருவைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் வேலு என்ற இம்மானுவேல் (24), பள்ளக்கால் புதுக்குடி, மெய்க்காத்தான் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பச்சாத்து என்ற படையப்பா (28) ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து, மேலும் ஒரு காரை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments