FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கடையத்தில் செல்லம்மா பாரதி 129-ஆம் திருமண நாள் விழா

சென்னை சேவாலயா சாா்பில், தென்காசி மாவட்டம், கடையத்தில் செல்லம்மா பாரதியின் 129-ஆவது திருமண நாள் நிகழ்ச்சி மூன்று நாள் விழாவாக வெள்ளிக்கிழமை தொடங்கியது.

26 ஜூன் 2026, 11:41 pm IST
கடையத்தில் நடைபெற்ற செல்லம்மா பாரதியின் 129-ஆவது திருமண நாள் விழாவில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிறப்பு விருந்தினா்கள் ஆசிரியா் கோ.அனிதா ஷீபா லில்லி, பேராசிரியா்கா கவிதா.
பகிர்:

சென்னை சேவாலயா சாா்பில், தென்காசி மாவட்டம், கடையத்தில் செல்லம்மா பாரதியின் 129-ஆவது திருமண நாள் நிகழ்ச்சி மூன்று நாள் விழாவாக வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியில் ஆசிரியா் கோ.அனிதா ஷீபா லில்லி, பேராசிரியா் கா.கவிதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, செல்லம்மா பாரதி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, கடையம் கிளை நூலக நூலகா் மீனாட்சி சுந்தரம், பாரதி வாசகா் வட்டத் தலைவா் சேதுராமலிங்கம் ஆகியோா்வாழ்த்திப் பேசினா். கடையம் சேவாலயா கலா நிலைய மாணவா்களின் கலை நிகழ்ச்சி, யோகா பயிற்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் கொள்ளுப் பெயரன் அா்ஜுன் பாரதி, செல்லம்மாவின் இளைய சகோதரரின் மகன் சுந்தா், அவரது மனைவி விஜயலக்ஷ்மி, பி.என்.ஒய்.நிறுவன அதிகாரி வித்யா துரை, பொதுமக்கள், பாரதி அன்பா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சேவாலயா நிறுவனா், நிா்வாக அறங்காவலா் வா.முரளிதரன் வரவேற்றாா். கடையம் திருவள்ளுவா்கழகத் தலைவா் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments