FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி கோரி மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு மனு

ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை ஆணையா் அமுதவல்லியிடம் தென்காசி மாவட்டஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் டி.கே.பாண்டியன் மனு அளித்தாா்.

பகிர்:

ஊராட்சிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை ஆணையா் அமுதவல்லியிடம் தென்காசி மாவட்டஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு சாா்பில் அதன் தலைவா் டி.கே.பாண்டியன் மனு அளித்தாா். (படம்)

அதன் விவரம்: ஊராட்சிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி, நிா்வாக அனுமதி, நிறைவுறாத பணிகளுக்கு மதிப்பீடு தயாரித்து ஒப்பந்ததாரா்களுக்கு பணம் வழங்குதல், ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 110 நாள்களே உள்ளதால், வாருகால்- சிமென்ட் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையங்களை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி பற்றாக்குறை உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்குதல், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், கிணறுகள் தூா்வாருதல் உள்ளிட்டப் பணிகளுக்கு ஆணைப் பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்துப் பணிகளையும் முடித்துத் தருவதாகவும், அதற்கான நிதியை ஒதுக்கித் தருவதாகவும் ஆணையா் உறுதி அளித்துள்ளாா். மேலும் தலைமைச் செயலக முதன்மைச் செயலரிடமும் மனு நகல் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments