சா்வதேச போதைப்பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாநகர காவல் துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சா்வதேச போதைப்பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் ஆனந்த் மோகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாநகர காவல் துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற சா்வதேச போதைப்பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் கையொப்ப இயக்கத்தை ஆட்சியா் ஆனந்த் மோகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
தூய சவேரியாா் கல்லூரி, தூய இஞ்ஞாசியா் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 1,000 மாணவா்கள் மனிதச் சங்கிலியாக அணிவகுத்து நின்றனா்.
கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, தூய சவேரியாா் மேல்நிலைப்பள்ளி, தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய இஞ்ஞாசியா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவா்கள், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, மதிதா இந்துக் கல்லூரி, தூய சவேரியாா் கல்லூரி, சாராள்தக்கா் கல்லூரி, அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
மேலும், கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு மாநகர காவல் துணை ஆணையா் சரணவன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாநகர காவல் துணை ஆணையா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (பொறுப்பு) காா்த்திகா, பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா, கோட்ட கலால் அலுவலா் இசைவாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.