தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
அம்பாசமுத்திரம் சின்னசங்கரன்கோவில் பகுதி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் காஜா காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் குத்தாலிங்கம் மகன் மாரிமுத்து (45). ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரம், சின்னசங்கரன்கோவில் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாரிமுத்து, தண்ணீரில் மூழ்கினாராம்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், ஆற்றில் மூழ்கிய மாரிமுத்துவை சடலமாக மீட்டனா். அம்பாசமுத்திரம் போலீஸாா், சடலத்தை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.