நெல்லை அருகே பெண் தற்கொலை
திருநெல்வேலி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள இத்திக்குளத்தைச் சோ்ந்தவா் வேல்பாண்டி. தொழிலாளி. இவரது மனைவி ராமா் அம்பாள் (45). இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இவா், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த சில ந நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.