முகப்பு
திருச்சி

விபத்தில் தாத்தா, பேரன் காயம்

முசிறி அருகே தண்டலைபுத்தூர் சேர்ந்தவர் ந. பரமசிவம் (59) இவர் இருசக்கர வாகனத்தில்  பேரன் சத்தியதேவுடன் (3)  பொன்னாங்கன்னிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று  விட்டு திரும்பிக் கொண்டிருந்த

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:56 am IST
பகிர்:

முசிறி அருகே தண்டலைபுத்தூர் சேர்ந்தவர் ந. பரமசிவம் (59) இவர் இருசக்கர வாகனத்தில்  பேரன் சத்தியதேவுடன் (3)  பொன்னாங்கன்னிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று  விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
தண்டலைப்புத்தூர் - பொன்னாங்கன்னிப்பட்டி சாலையில் வந்தபோது எதிரே  அட்டாளப்பட்டி  சின்னதுரை மகன் சதீஷ் (21) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பரமசிவத்துக்கு தலையில் பலத்த காயம்  ஏற்பட்டது.  குழந்தை சத்தியதேவின் வலது கால்  முறிந்தது. தண்டலைப்புத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் குழந்தை சத்தியதேவ் சேர்க்கப்பட்டார்.   சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  பரமசிவம் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக பரமசிவத்தின் மகன் சதீஷ்குமார் (29) முசிறி போலீஸில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments