முகப்பு
திருச்சி

டிரம்முக்குள்  தவறி விழுந்த குழந்தை சாவு

திருச்சி கீழரண்சாலையில் டிரம்முக்குள் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:56 am IST
பகிர்:

திருச்சி கீழரண்சாலையில் டிரம்முக்குள் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.
கீழரண்சாலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சுரேஷின் ஒன்றரை வயது மகள் யோகலட்சுமி. இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் பின்புறப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குடிநீர்த் தொட்டிக்கு அருகில்  இருந்த சிறிய அளவிலான டிரம்மில் குழந்தை தவறி விழுந்தார்.
இதை கண்ட அவரது பெற்றோர் , உறவினர்கள் மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை யோகலட்சுமி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.