முகப்பு
திருச்சி

பெல் அதிகாரி வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் பெல் நிறுவன மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:47 am IST
பகிர்:

திருச்சியில் பெல் நிறுவன மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி காட்டூர் அம்மன் நகர் விஸ்தரிப்பு பகுதியில் வசித்து வருபவர்  ரமேஷ்குமார்(45) . இவர், திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் முதுநிலை (சீனியர்) பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில்  அவர்  வீட்டை பூட்டி வீட்டு குடும்பத்தாருடன்,  பொருள்கள் வாங்க,  திருச்சிக்குச் சென்று வீட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின்  சுற்றுச்சுவரில் உள்ள கதவுகள் பூட்டியது போலவே இருந்துள்ளது. அந்த பூட்டை திறந்து உள்ளே சென்றபோது,  வீட்டின்  கதவுகள் மற்றும் பூட்டுகள், படுக்கை அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தன.  பீரோவில் பார்த்தபோது அதிலிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10,000 ரொக்கம் உள்ளிட்ட பொருள்களும் திருடுபோனது தெரியவந்தது. 
புகாரின் பேரில்,  திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments