தனியார் மில் பேருந்துகள் சிறைபிடிப்பு
வையம்பட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மில் பேருந்துகளை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வையம்பட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மில் பேருந்துகளை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே தண்டல்காரனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(18), திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வந்தார். மில்லுக்கு சொந்தமான பேருந்தில் சனிக்கிழமை காலை வேலைக்குச் சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேட்டதற்கு, அலட்சியமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமியின் உறவினர்கள், கிராம மக்கள் பொன்னம்பலம்பட்டி சுங்கசாவடி பகுதி அருகே 4 மில் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வையம்பட்டி காவல் ஆய்வாளர் அனுஷ்கா மனோகரி, பெண் காணாமல் போன பகுதி வடமதுரை காவல் சரகத்திற்குள்பட்ட பகுதி என்பதால் அங்கு சென்று புகார் அளிக்க அறிவுறுத்தியதின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.