ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி. பாராட்டு
மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அண்மையில் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்ட
மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் அண்மையில் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
மணப்பாறையில் கடந்த ஜூன் 17ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்த இருவா் அவரின் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில், அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநா் செல்லையா, ஆட்டோவை இருசக்கர வாகனத்தின் மீது மோதி திருடா்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தாா்.
அவா் மூலம் தப்பிய மற்றொருவரையும் மணப்பாறை பகுதியிலேயே போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 7 பவுன் நகையை மீட்டு நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தினா்.
Advertisement
Advertisement
இதையடுத்து கொள்ளையா்களை மடக்கி பிடித்து காவல்துறைக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநா் செல்லையாவை குடும்பத்தினருடன் திருச்சிக்கு நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.